பிரதமர் மோடியின் 2 நாள் அமெரிக்க பயணம் | Narendra Modi | United States | Donald Trump
டிரம்பை சந்திக்கும் மோடி கிடைக்க போகும் சிறப்பு அமெரிக்கா பயணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்க அதிபராக ஜனவரி 20ம்தேதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். 27ம் தேதி பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்து பணியாற்றுவது என இரு தலைவர்களும் தீர்மானித்தனர். மோடியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, அநேகமாக பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வருவார் என, டிரம்ப் கூறினார். மோடியின் அமெரிக்க பயணத்தை டிரம்ப்பே உறுதி செய்த நிலையில், தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. மோடி அமெரிக்கா செல்லும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 12,13 ஆகிய 2 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார் என, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். அதிபராக டொனால்ட் பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது இதுதான் முதல்முறை.