உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய வம்சாவளி வேட்பாளரை டிரம்ப் வசைபாடும் அதிர்ச்சி | New Yourk Meyor Election | Zohran mamdani

இந்திய வம்சாவளி வேட்பாளரை டிரம்ப் வசைபாடும் அதிர்ச்சி | New Yourk Meyor Election | Zohran mamdani

நியூயார்க் மேயர் ஆகப்போகும் இந்தியர் அதிபர் டிரம்ப் வன்மம் கக்கும் அதிர்ச்சி யார் இந்த மம்தானி? பரபரப்பு தகவல்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரின் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இப்போது நியூயார்க் மேயராக இருக்கும் எரிக் ஆடம், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். 2021 தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார். இந்தாண்டு தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட, நியூயார்க் நகர மக்களுக்கு பெரிதும் அறிமுகமில்லாத ஜோஹ்ரம் மம்தானி போட்டியில் குதித்தார். முன்னாள் கவர்னர் ஆண்ட்ரிவ் கியுமோவும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்தார். ஜோஹ்ரம் மம்தானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தாய் மீரா நாயர், ஒடிசாவைச் சேர்ந்த சினிமா இயக்குநர். சலாம் பாம்பே, காமசூத்ரா: ஏ டேல் ஆப் லவ் ஆகிய படங்களை இயக்கியவர். மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி, குஜராத்தை சேர்ந்த முஸ்லிம். அமெரிக்காவில் தொழிலதிபராக இருந்த மம்தானி அரசியலில் இறங்கினார். 2021ல் நியூயார்க் மாகாண சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் இப்போது மேயர் தேர்தலில் போட்டியிட விரும்பி ஜனநாயகக் கட்சி சார்பில் புதுமையான பிரசாரங்களை முன்னெடுத்தார். பாலிவுட் வசனங்களை பயன்படுத்தியது கவனம் பெற்றது. இதன் காரணமாக ஜனநாயகக் கட்சி சார்பில் நடந்த வேட்பாளர்களுக்கான முதன்மை தேர்வில், சக வேட்பாளரான ஆண்ட்ரிவ் கியுமோவை விட 40 சதவீதம் அதிக ஆதரவு பெற்று வேட்பாளராக தேர்வானார். நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி வேட்பாளர் என்ற பெருமையை ஜோஹ்ரம் மம்தானி பெற்றுள்ளார். நவம்பரில் நடக்கும் மேயர் தேர்தலில் இவர் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்ட்டிஸ் ஸ்லிவாவை எதிர்த்து போட்டியிடுவார். ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி களம் இறங்குவதற்கு குடியரசு கட்சியை சேர்ந்தவரான அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மம்தானியை பல வகையில் பர்சனல் அட்டாக் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது. ஜனநாயக கட்சியினர் எல்லையை மீறி விட்டார்கள். 100 சதவீதம் கம்யூனிஸ்ட் கிறுக்கனான ஜோஹ்ரம் மம்தானி முதன்மை தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தாக நியூயார்க் நகரின் மேயர் ஆக போகிறான். முன்பெல்லாம் தீவிர கம்யூனிஸ்ட்களை களம் இறக்கினர். இப்போது அதை விட தீவிரவாத கம்யூனிஸ்ட்டை கொண்டு வந்து இருக்கின்றனர். மம்தானி பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறார். அவர் குரலும் கரகரப்பாக இருக்கிறது. அவருக்கு அந்த அளவு புத்தி கிடையாது. டம்மிகள் எல்லாம் ஒன்று கூடி அவரை ஆதரிக்கின்றனர். இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விஷயமாக இருக்க போகிறது என்று டிரம்ப் சாடினார்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை