வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்! | Cyclone Fengal | Heavy Rains Chennai | IMD Alert
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்! | Cyclone Fengal | Heavy Rains Chennai | IMD Alert தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம் என இந்திய வானிலை இன்று காலை எச்சரித்து இருந்தது. ஆனால் கணிப்பை மீறி முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இதன் எதிரொலியாக, ஏற்கனவே அறிவித்தபடி டெல்டா மாவட்டங்கள் மற்றும் எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். அடுத்த 2 நாட்களில் தமிழக-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. இது தவிர சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 28 வரை பரவலாக மிதமான மழையும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது. புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ள பெங்கல் என பெயரிடப்பட்டு உள்ளது.