ராஜ்யசபாவில் எரிமலையாய் வெடித்த நிதியமைச்சர் | Nirmala Sitharaman | Union Finance Minister
சீண்டிய எதிர்கட்சிகள் சீறிய நிர்மலா சீதாராமன் நெத்தியடி பதில் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2வது நாளாக இன்று ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பட்ஜெட்டை விமர்சித்து பேசினார். பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்றும் கார்கே கடுமையாக சாடினார். அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல முயன்றபோது, எதிர்ப்பு கோஷமிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.