/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் வேட்டையில் அதிரடி | Pahalgam attack | Terror hideout
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் வேட்டையில் அதிரடி | Pahalgam attack | Terror hideout
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க நமது ராணுவம் தயாராகி வருகிறது. முன்னதாக வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் எல்லையில் பறக்க தடை, பாகிஸ்தான் பொருட்கள் இறக்குமதிக்கு தடை என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இன்னொரு பக்கம் சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றுவிட்டு தப்பிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணியும் நடக்கிறது. காஷ்மீர் எல்லையில் மறைந்திருந்து அவ்வப்போது தாக்கும் பயங்கரவாதிகளுக்கு நம் ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுக்கின்றனர்.
மே 05, 2025