பிரதமரின் சோசியல் மீடியா பக்கத்தை கையாளும் 6 பெண்கள் | PM Modi | Womens day | PM Social media
விஞ்ஞானி எலினா மிஸ்ரா முதல் செஸ் வீராங்கனை வைஷாலி வரை பிரதமர் கொடுத்த வாய்ப்பு டிஸ்க்: பிரதமரின் சோசியல் மீடியா பக்கத்தை கையாளும் 6 பெண்கள் | PM Modi | Womens day | PM Social media | 6 Women| மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சோசியல் மீடியா கணக்குகள் மகளிர் வசம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்ட அவர், தான் அளித்த வாக்குறுதிப்படி, பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களிடம் எனது சோசியல் மீடியா கணக்குகள் ஒப்படைக்கப்படுவதாக கூறினார். பெண் சாதனையாளர்களிடம் பிரதமரின் சோசியல் மீடியா கணக்குகளை ஒப்படைப்பது இது முதல் முறை அல்ல. 2020 சர்வதேச மகளிர் தினத்தன்று, 7 பெண் சாதனையாளர்கள் அவற்றை இயக்கினர். இந்த முறை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 6 பெண்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசாவை சேர்ந்த அணு விஞ்ஞானி எலினா மிஸ்ரா, மத்திய பிரதேச விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி, டில்லி மருத்துவர் அஞ்சலி அகர்வால், காளான் தொழில் செய்யும் பிகாரை சேர்ந்த அனிதா தேவி, ராஜஸ்தான் பிரன்டியர் மார்கெட்ஸ் நிறுவன சிஇஓ அஜய்தா ஷா, தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஆகிய 6 பேரும் பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் தாங்கள் சந்தித்த சவால்கள், சாதனைகளை பதிவிட்டனர். தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, மோடியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமரின் சோசியல் மீடியா பக்கத்தை கையாள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் 6 வயதில் இருந்தே செஸ் விளையாடி வருகிறேன். பல போட்டிகளில் வென்று இந்தியாவை பிரதிநித்துவப்படுத்துவதில் பெருமையடைகிறேன். அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது, தடைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். அனைவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆர்வம் உங்கள் வெற்றிக்கு உதவும். எனது FIDE தரவரிசையை மேலும் மேம்படுத்தி, எனது நாட்டை பெருமைப்படுத்த விரும்புகிறேன். நான் விரும்பும் விளையாட்டில் மேலும் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் வைஷாலி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அணு விஞ்ஞானி எலினா மிஸ்ரா, விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனியும் பதிவிட்டுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பத்தின் எல்லையற்ற உலகம் மிகவும் உற்சாகமானது. நாம் வடிவமைத்து, மேம்படுத்திய படைப்புகள் பயன்பாட்டிற்கு எடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வர்த்தைகளே இல்லை. இந்தியாவின் அணு மற்றும் விண்வெளித் திட்டத்தில் எங்களை போன்ற பல விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.