உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தெலங்கானா பாஜ தலைவர்களுக்கு டோஸ் விட்டார் மோடி! | PM Modi | Telangana | Telangana BJP leaders

தெலங்கானா பாஜ தலைவர்களுக்கு டோஸ் விட்டார் மோடி! | PM Modi | Telangana | Telangana BJP leaders

ெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது பாஜ மேலிடத்தின் நீண்ட கால கனவு. அதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தை சேர்ந்த எம்பிக்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமாரை மத்திய அமைச்சர்களாக்கினார் பிரதமர் மோடி. தெலங்கானாவில் பாஜவின் வளர்ச்சிக்கு அவர்கள் பாடுபடுவர் என அவர் நினைத்தார். ஆனால் அவர்களோ கட்சியில் தங்களது செல்வாக்கை நிரூபிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். கிஷன் ரெட்டி - பண்டி சஞ்சய் குமார் இடையே நிலவும் உட்கட்சி பூசலால் பாஜ தொண்டர்களும் கவலை அடைந்தனர். கிஷன் ரெட்டி, பிராதன எதிர் கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதியுடன் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக பண்டி சஞ்சய் குமார் உள்ளார். இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. தெலங்கானா பாஜ தலைவர்களிடையே அதிகார மோதல் நீடிப்பது அக்கட்சியை ஊசலாட வைத்தது. சமீபத்தில் நடந்த ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில் வெறும் 8.8 சதவீத ஓட்டுகளை பாஜ பெற்றது. இது பாஜ மேலிட தலைவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. டில்லியில் சமீபத்தில் பாஜ தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். அப்போது தெலங்கானா பாஜ தலைவர்களை பிரதமர் மோடி கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. கட்சியின் செயல்பாட்டை நானே நேரடியாக கண்காணிப்பேன். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி விடுவேன் என பிரதமர் மோடி கோபத்துடன் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #PMModi | #Telangana | #TelanganaBJP | #Elections

டிச 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை