உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தலைமறைவாக உள்ளவரை தேடும் தனிப்படை போலீஸ்! Ponmudi | Minister | DMK | Mud Flung

தலைமறைவாக உள்ளவரை தேடும் தனிப்படை போலீஸ்! Ponmudi | Minister | DMK | Mud Flung

பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்! ஒருவரை தூக்கியது போலீஸ்! டிசம்பர் மாதத்தில் பெஞ்சல் புயலின் போது கனமழை பெய்து விழுப்புரம் மாவட்டம் மலட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணெய்நல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. டிசம்பர் 3ம் தேதி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்பி பொன் கவுதமசிகாமணி, கலெக்டர் பழனி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது கூட்டத்தில் அமைச்சர் மீதும், அதிகாரிகள் மீதும் சேறு வீசப்பட்டது. இதுகுறித்து அமைச்சரின் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அசிங்கமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர் புகாரில் கூறி இருந்தார். சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், விஜயராணி மீது எஸ்ஐ பாலசிங்கம் வழக்கு பதிவு செய்தார். தலைமறைவான அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜ நிர்வாகியான விஜயராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ