உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால் யார் பொறுப்பு: ராகுல் Rahul| hindenburg| modi| sebi

முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால் யார் பொறுப்பு: ராகுல் Rahul| hindenburg| modi| sebi

வெளிநாடுகளில் அதானி குழுமம் தொடங்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வாங்கி குவித்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் சில கேள்விகள் கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக்கொள்வோம். போட்டியில், நடுவர் சமரசம் செய்கிறார் என்பது போட்டியை பார்க்கும் அனைவருக்கும் தெரிகிறது என்றால் அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை, முடிவு என்னவாக இருக்கும்? நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இதுதான் இந்திய பங்கு சந்தையில் நடக்கிறது. செபியின் தலைவர் மாதாபி புரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து இதனை விசாரிக்குமா?

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி