மோடி, பாஜ, ஆர்.எஸ்.எஸ் குறித்த ராகுலின் பேச்சுகள் நீக்கம்! | Rahul | Parliament | Om Birla
ராகுல் பேச்சை சென்சார் செய்த சபாநாயகர் ஓம் பிர்லா! பதினெட்டாவது லோக்சபாவின் முதல் கூட்டம் ஜூன் 24ல் தொடங்கியது. ஜூன் 27-ல் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் தனது முதல் உரையை ஆற்றினார். நீட், அக்னிவீர் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முதலான பல பிரச்னைகளை அவர் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பிரதமர் மோடி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். இந்துக்கள் குறித்து அவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடியும் முதல் முறையாக ராகுலின் பேச்சுக்கு எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார். ராகுல் சபாநாயகரையும் விட்டுவைக்கவில்லை. அவருடைய பேச்சை இண்டி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாடு முழுவதும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காசியில் ராகுல் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.