உதயமாகிறது அய்யா பாட்டாளி மக்கள் கட்சி? Ramadoss | Anbumani | PMK Clash | New Party
பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான மோதல் நீடிக்கிறது. அன்புமணி தரப்புக்கு பாமக கட்சி மற்றும் மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ராமதாஸ் தரப்பில் இருந்து தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, தன் தரப்பு நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ராமதாஸ், தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பை கூட, இரு வாரங்களாக ரத்து செய்துவிட்டார். இதற்கிடையே, தேர்தல் கமிஷனில் இருந்து பதில் வராததால், புதிய கட்சி துவங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. மேலும் தன் ஆதரவாளர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி என புதிய கட்சியை துவங்கி பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாம்பழ சின்னம் கிடைக்காவிட்டால், பொது சின்னம் பெற, இந்த ஏற்பாட்டை, ராமதாஸ் செய்வதாகவும் வெளியான தகவலால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இந்த தகவல்களை ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் மறுத்துள்ளார். #Ramadoss #Anbumani #PMKClash #NewParty #Politics #India #PoliticalDebate #Leadership #YouthPolitics #TamilNadu #PoliticalViews #PoliticalConflict #PartyLeadership #SocialIssues #StrongVoices #ChangeInPolitics #PoliticalStrategy #PoliticalReform