உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு! பின்னணி இதுதான் | Ramadoss | Anbumani | PMK | Auditor Gu

ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு! பின்னணி இதுதான் | Ramadoss | Anbumani | PMK | Auditor Gu

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான கருத்து மோதல் உச்சம் அடைந்ததால், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்கள் அதே பொறுப்பில் நீடிப்பார்கள் என்று அன்புமணி மீண்டும் அறிவிப்பதும் கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் களமிறங்கி உள்ளனர். பாமகவில் தொடரும் குழப்பத்திற்கு தீர்வு காண இருவரும் விரைவில் சந்திப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென அன்புமணி தைலாபுரம் இல்லம் வந்தார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த சந்திப்பில், பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு முடிந்து அன்புமணி புறப்பட்ட சில நொடிகளில், ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒரே காரில் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, நண்பர் ராமதாசை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்து பேசியதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர்களிடம் ராமதாஸ் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. அன்புமணியை பற்றி மேலும் பல விஷயங்களைச் சொல்லி ஆதங்கப்பட்டாராம். அதையெல்லாம் கேட்டுக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, தேர்தல் நேரத்தில் பாமகவில் இப்படி நடப்பது திராவிட கட்சிகளுக்குத்தான் லாபம். உங்களை நம்பி ஒரு பெரும்பான்மை சமூகம் இருப்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றெல்லாம் பேசி ராமதாசை சமாதானப் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதில் ராமதாஸ் ஓரளவுக்கு சமாதானம் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு பாமக நலன் விரும்பிகள் சிலர், முதலில் திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகனிடம் தான் கேட்டுள்ளனர். அவர் தலையிட விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டதால் தான் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமியிடம் சொன்னதாக தெரிகிறது. அதன்பிறகே இருவரும் ராமதாசை சந்தித்து பேசியுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8ம் தேதி தமிழகம் வரும் நிலையில், அதற்குள் பாமக பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர ஆலோசனை நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அமித்ஷா வருகையின்போது பாமக உடனான கூட்டணி அறிவிப்பை வெளியிட பாஜ முனைப்பு காட்டி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜூன் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி