உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முற்றும் தந்தை - மகன் மோதலின் அடுத்த கட்டம் | Ramadoss | Founder | PMK | Election commission

முற்றும் தந்தை - மகன் மோதலின் அடுத்த கட்டம் | Ramadoss | Founder | PMK | Election commission

2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் சூழலில், கட்சிகள் முழு வீச்சில் அதற்கு தயாராகி வருகின்றன. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தையில் பரபரப்பாக இருக்க, பாமகவில் தந்தை, மகன் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடைபயணம், பொதுக்குழு, வன்னியர் இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம் என அன்புமணி ஒரு பக்கம் பரபரப்பாக இயங்கி வருகிறார். இன்னொரு பக்கம் மகளிர் மாநாடு, பொதுக்குழு என்று ராமதாஸ் தனி டிராக்கில் பயணிக்கிறார். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பத்திலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். அன்புமணியின் அடுத்தடுத்த நகர்வுகள் ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க ராமதாஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சி நிறுவனரின் ஒப்புதலே இல்லாமல் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளனர். இது கட்சி விதிகளுக்கு முரணானது. பதவியை நீட்டிக்க பாமக விதி 13இன் படி பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றுக்கு கட்சி நிறுவனர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் பதவியை தன்னிச்சையாக நீட்டிப்பு செய்துள்ளனர். தலைவர் பதவியில் இருந்த அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை