தமிழகம் - அயோத்தி உறவு எத்தகையது? RDFIH meeting | RSS Meeting| BJP| Natraj | Deendayal Upadhyaya|
தமிழகம் - காசி இடையே இவ்வளவு நெருங்கிய தொடர்பா? கல்வெட்டு ஆய்வில் ஆதாரப்பூர்வ தகவல்கள் ஜனசங்க தலைவர், ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியர், பாஜ முன்னோடி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை மயிலாப்பூரில் சிறப்பு சிந்தனை கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைந்த மனிதநேயத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி, டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.நட்ராஜ் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரும், எழுத்தாளருமான ரதன் ஷார்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தமிழக கல்வெட்டுகளில் இந்திய தேசியம் என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர், கல்வெட்டு ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியை செந்தில்குமார் ஒருங்கிணைக்க, ஆர்டிஎப்ஐஎச் அமைப்பு செயலாளர், சுந்தரம் நாகராஜன், ஆய்வாளர் தர்மசேனன், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.