குடைச்சல் கொடுத்ததால் நடவடிக்கை பாஜவை விட்டு வெளியேறிய மாஜி r.k. singh bihar|bihar election aftermat
பீகார் சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜ மட்டும் 89 இடங்களில் வென்று பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்தது. வெற்றிபெற்ற கையோடு கட்சிக்கு எதிராக செயல்படும் தலைவர்களை களையெடுக்கும் பணியில் பாஜ இறங்கியது. இதில், பீகாரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர் கே சிங் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாஜவில் இருந்த சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து, எம்எல்சி அசோக்குமார் அகர்வால் மற்றும் கதிஹார் மேயர் உஷா அகர்வால் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதால், ஒழுக்க கேடாக கருதி, ஏன் கட்சியில் இருந்து நீக்க கூடாது என்பதற்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. #BJPSuspendsRKSingh #AntiPartyActivities #BJPNews #ExMinisterSuspended #BiharPolitics #RKSingh #PoliticalDrama #IndiaPolitics #PartyDiscipline #BJP #ElectionResults #PoliticsToday #PartyLoyalty