பலாத்காரத்துக்கு எதிரான போராட்டம் பற்றி சஞ்சய் ராவத் ஆவேசம்! | Sanjay Raut on BJP Protest
மேற்கு வங்கத்தின் பாஜவின் போராட்டம் குறித்து மகாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள சிவசேனா யுபிடி-யின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். மகராரஷ்டிராவின் பத்லாப்பூரில் நர்சரி பள்ளியில் படிக்கும் அப்பாவி பெண் குழந்தைகள் அங்கு பணியாற்றும் ஊழியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகினர். அந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து, மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய பந்த் நடத்த திட்டமிட்டோம். ஆனால், அதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. ஏனென்றால் மகாராஷ்டிராவை மோடியும், அமித் ஷாவும் ஆட்சி செய்கின்றனர். அவர்களது தலைமையிலான ஆட்சி என்பதால், அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து பாஜ பந்த் செய்கிறது. அங்கு பாஜவுக்கு எதிரான ஆட்சி நடப்பதால், பாஜவினர் போராட்டம் நடத்துடவதுடன் போலீசாரையும் தாக்குகின்றனர். பெண்களுக்கு எதிரான நீதி கேட்கும் போராட்டத்தில் பாஜ இரட்டை வேடம் போடுகிறது என சஞ்சய் ராவத் கூறினார்.