உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிஐஜி வருண்குமார் Vs சீமான் வார்த்தை போர் Seeman | Varunkumar DIG | Trichy | Court| Defamation case

டிஐஜி வருண்குமார் Vs சீமான் வார்த்தை போர் Seeman | Varunkumar DIG | Trichy | Court| Defamation case

திருச்சி சரக டிஐஜியாக இருப்பவர் வருண்குமார். இவர், திருச்சி எஸ்.பி.யாக இருந்தபோது நாதக கட்சி நிர்வாகியை கைது செய்தததை கண்டித்து சீமான், அவரை கடுமையாக விமர்சித்திருந்தார். தம்மையும், தமது குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சித்ததாக சீமான் மீது திருச்சி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் வருண்குமார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சீமான் ஆஜராகவில்லை. டிஐஜி வருண்குமார் ஆஜரானார். நீதிமன்றத்துக்கு வெளியே சீமான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வருண்குமார், மைக் புலிகேசிக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என கூறிவிட்டு சென்றார்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !