டெரரிஸ்ட்களுடன் பாக் தொடர்பு: அம்பலமாக்கும் அனைத்து கட்சி குழுக்கள் | MPs ShashiTharoor | kanimozhi
ஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்ற சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா துணை அமைப்பான T R F பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்ததை அடுத்து, பாகிஸ்தானில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது இந்திய ராணுவம். அதைத் தொடர்ந்து, 4 நாள் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்த நிலையில், கடந்த 10ம்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு வரும் பாகிஸ்தானின் முகத்திரையை சர்வதேச அரங்கில் கிழிப்பதற்காக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 7 குழுக்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது. இந்தக்குழுவில் 40 எம்பிக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், வெளியுறவு அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அந்தக்குழு 7 குழுவாக பிரிந்து இந்தியாவின் தோழமை நாடுகளுக்கும், ஐக்கிய பாதுகாப்பு கவுன்சில் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கும் இம்மாத இறுதியில் பயணம் மேற்கொள்வார்கள். பயங்கரவாதத்தை எக்காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்ற இந்தியாவின் ஸ்ட்ராங் மெசேஜை உலக நாடுகளுக்கு 7 குழுக்கள் விவரமாக எடுத்துச் சொல்லும். அந்த 7 குழுக்களுக்கு தலைமை வகிக்கும் எம்.பிக்கள் யார், யார்? என்பதை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். சசி தரூர் (காங்கிரஸ்) ரவிசங்கர் பிரசாத் (பாஜ) சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்) வைஜயந்த் பண்டா (பாஜ) கனிமொழி (திமுக) சுப்ரியா சுலே (தேசியவாத காங் சரத் பவார் பிரிவு) ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் எம்பிக்கள் குழுவுக்கு தலைமை தாங்குவர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்லும் 7 குழுக்களில் இடம்பெறும் 40 எம்பிக்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையையும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய முப்படைகளின் அதிரடி தாக்குதலையும் வெகுவாக பாராட்டியவர் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர். வெளியுறவு துறைக்கான பார்லிமென்ட் குழுவின் தலைவராக இருக்கும் சசி தரூர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் அளவிலான முக்கிய பொறுப்பையும் வகித்துள்ளார். ஆங்கிலத்தில் அதீத புலமை மிக்கவர். இதுேபோன்ற காரணங்களால் அவருக்கு பிரதமர் மோடி இந்த முக்கிய பொறுப்பை கொடுத்துள்ளார். திமுக எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு எம்பி சப்ரியா சுலே ஆகியோரும் ஒவ்வொரு குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளனர். மகாராஷ்ட்ர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த்தும் ஒரு குழுவுக்கு த லைமை வகிக்கவுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த 7 குழுக்கள் செல்லவுள்ளன. பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்பதை எடுத்து கூறுவர். ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாத முகாம்களை குறி வைத்துத்தான் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் சொல்வது போல மக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தவில்லை என்பதை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அனைத்துக் கட்சி குழுவினர் எடுத்துரைப்பர். ஆபரேஷன் சிந்தூரில் கொல் லப்பட்ட முக்கிய பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றதையும், ஐ.நா மற்றும் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் புகைப்படங்களுடன் எடுத்து சொல்வார்கள். பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆஸிம் முனிரின் குழுவில் ஒசாமா பின்லேடனின் கூட்டாளியின் மகன் இடம்பெற்றுள்ளார், இதன்மூலம் பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தான் ராணுவத்தின் உறவை புரிந்து கொள்ளலாம் என்பதையும் இந்திய குழுக்கள் விளக்கிச் சொல்லும். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் இந்துக்களா என்பதை கேட்டு கேட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தில் இறந்தவர்களின் சோக பின்னணி பற்றியும் உலக நாடுகளின் பிரதிநிதிகளிடம் இந்திய குழுக்கள் விளக்கிச் சொல்லும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.