உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மத சுதந்திரத்தை வங்க தேச அரசு உறுதி செய்ய வேண்டும் Sheikh Hasina | Ex PM | Bangladesh | X handle

மத சுதந்திரத்தை வங்க தேச அரசு உறுதி செய்ய வேண்டும் Sheikh Hasina | Ex PM | Bangladesh | X handle

வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து சம்மிலிதா ஜோதே என்ற இந்து அமைப்பு போராட்டம் நடத்தியது. அதன் தலைவர் சின்மய் கிருஷ்ணதாஸ் தலைமையில், நடந்த பேரணியில் வங்க தேச இந்துக்கள், இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். வங்க தேச கொடியை அவமதித்ததாக சின்மய் கிருஷ்ணதாஸ் மீது வங்க தேச அரசு வழக்கு பதிவு செய்தது. அவர் டாக்கா விமான நிலையம் வந்த போது, போலீசார் அவரை கைது செய்தனர். அவரை விடுதலை செய்யக் கோரி வங்க தேச இந்துக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவும் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் வலியுறுத்தி உள்ளார்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி