இந்தியா -சிங்கப்பூர் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் | Singapore President Tharman Visit to India
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் தர்மனை ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளை தர்மனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிங்கப்பூர் பிரதிநிதிகளை அதிபர் தர்மன் அறிமுகம் செய்து வைத்தார். 1965ல் சிங்கப்பூர் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதை முதலில் அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் தொழில், வர்த்தகம், முதலீடு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையிலான உறவு வலுவாக உள்ளது. சிங்கப்பூர் பல ஆண்டுகளாக இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது.