/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடைக்குள் புகுந்து இரவில் தாக்குதல்! என்ன காரணம்? | Sivagangai | BJP | Police | Investigation
கடைக்குள் புகுந்து இரவில் தாக்குதல்! என்ன காரணம்? | Sivagangai | BJP | Police | Investigation
சிவகங்கையை சேர்ந்தவர் மெக்கானிக் சதீஷ். பாஜவின் நகர் வர்த்தக பிரிவு தலைவர். வயது 51. வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு வேலை முடித்துவிட்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் சந்தித்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் தங்கியிருந்த மேளம் அடிக்கும் குழு சதீஷ் தரப்பிடம் சண்டை போட்டுள்ளது. அவர்களும் மது போதையில் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. ஒருவரையொருவர் சரமாரியமாக தாக்கி கொண்டனர்.
ஆக 29, 2025