உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மனம் இல்லாமல் மடைமாற்றுகிறது திமுக; எஸ்ஆர் சேகர் பாய்ச்சல் | SR SEKHAR | BJP| DMK | Dayanidhi | Modi

மனம் இல்லாமல் மடைமாற்றுகிறது திமுக; எஸ்ஆர் சேகர் பாய்ச்சல் | SR SEKHAR | BJP| DMK | Dayanidhi | Modi

சமூகநீதி உரிமையை கண்டு தயாநிதிக்கு வயிற்றெறிச்சல்! பாஜ மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகரின் அறிக்கை: பார்லிமென்டில் உடனடியாக மொழிபெயர்க்கும் வசதியில் 6 புதிய மொழிகளை இணைத்ததில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை. திமுக எம்பி தயாநிதி மாறன், சமஸ்கிருதத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் ஆட்சேபனை தெரிவிக்கிறார். முஸ்லிம் சகோதரர்கள் பரவலாக பேசும் உருது மொழியையும் உடனடி மொழிபெயர்ப்பு மொழிகளில் இணைத்துள்ளனர். இதை ஏற்க மனம் இல்லாமல்தான் திமுக இப்படி மடை மாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் காரணமாக சமஸ்கிருத மொழியை இணைத்துள்ளதாக குற்றம் சாட்டும் தயாநிதி மாறன், சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் எனக்கூறிய அம்பேத்கரின் கருத்தையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமாக கூறுவாரா? நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்று பேசிய தயாநிதிமாறனுக்கு, மொழிவாரி சிறுபான்மையினருக்கு கிடைத்த இந்த சமூக நீதி உரிமையை கண்டு வயிற்றெரிச்சல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என்றுமே அனைத்து சிறுபான்மையினருக்கும் பக்க பலமாக நின்று, என்றுமே சமூக நீதியை நிலைநாட்டும் என எஸ்ஆர் சேகர் கூறியுள்ளார்.

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி