இந்த தமிழின துரோகிகளுக்கு 2026ல் நிச்சயம் தண்டனை கிடைக்கும் | SRSekhar | State Treasurer | BJP
பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இஸ்லாமிய ஓட்டுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதில் யார் முன்னணி என்பதில் தமிழக கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் 58 பேரை கொன்று குவித்த கொலை குற்றவாளி, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை மதுரை ரயில் நிலையத்தில் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த கொலையாளி பாஷா மரணித்ததற்கு ஒப்பாரி வைப்பதில் ஒரே போட்டி யார் முன்னணி, யார் அதிக ஒப்பாரி, யார் அதிக சத்தம் என்பதில் பல கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி சீமானா ? திருமாவளவனா? வன்னியரசா ? திமுகவா ? காங்கிரசா? கம்யூனிஸ்டா? தனியரசா? இனி எழுத இடமே இல்லாத அளவுக்கு எத்தனையோ பேர்... அன்று கோவையில் பாஷாவால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தவில்லை, சிதறவில்லை மாறாக ரத்தம் ஆறாக ஓடியது. கண்ணால் பார்த்த சாட்சி என்பவனாக நெஞ்சம் வெடிக்கும் காட்சி என்பதால் இப்போது ஒப்பாரி வைப்பவர்களை கேட்கிறேன் ... உங்களுக்கு இதயம் இருக்கிறதா ? உண்மை தெரியுமா ? ஓட்டுக்காக நியாயத்தை, தர்மத்தை, தன்மானத்தை விற்கும் இந்த கபட வேடதாரிகளை யார் தண்டிப்பார்கள்?