விசிக பொதுக்கூட்ட மேடை படிக்கட்டு சரிந்ததால் பதற்றம் | Stage stairs collapsed | VCK | MLA injured
சிதம்பரம் புறவழி சாலையில் வரும் 6ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்எல்ஏவுமான ரவிக்குமார், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சிறப்பு விருந்தினர்கள் வரும் வழிகளை ஆய்வு செய்த அவர்கள் இறுதியில் மேடை மீது ஏறினர். இதற்காக தற்காலிக படிக்கட்டு அமைத்திருந்தனர். முதலில் ஏறிய எம்.பி.ரவிக்குமார் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இருவர் மேடைக்கு சென்ற நிலையில், அவர்களை தொடர்ந்து எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோரும் படிக்கட்டில் ஏறினர். மேடையை நெருங்கும் நேரத்தில் திடீரென படிக்கட்டு சரிந்ததால், எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் 3 பேர் உட்பட 5 பேர் கீழே விழுந்தனர்.