உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக குடும்ப விவரங்களை அறிந்து வைத்திருக்கும் சுப்ரியா சுலே! | Supriya Sule | Sharad Pawar | DMK

திமுக குடும்ப விவரங்களை அறிந்து வைத்திருக்கும் சுப்ரியா சுலே! | Supriya Sule | Sharad Pawar | DMK

நம்ம கட்சி விவகாரம் இவருக்கு எப்புடி தெரியுது! தலையை சொரியும் திமுக எம்பிக்கள்! மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் என, பல பதவிகளை வகித்தவர் சரத் பவார். மஹாராஷ்டிராவின் வலுவான தலைவர் என அழைக்கப்படுபவர். ஆனால் இவரது சகோதரர் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்து, பா.ஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். நடந்து முடிந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் படு தோல்வியை தழுவினார் சரத் பவார். சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழக அரசியலை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அத்துடன் தி.மு.க குடும்ப அரசியலில் என்ன நடக்கிறது, குடும்பத்துக்குள் உள்ள பிரச்னைகள், கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் என, அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளாராம். பல டில்லி பத்திரிகையாளர்கள் சுப்ரியாவை சந்தித்து, தமிழக அரசியலின் உள்குத்து விவரங்களைப பெற்று கொள்கின்றனர்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ