உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏழைகள் நிலங்களுக்கு சொத்துரிமை வழங்கும் ஸ்வாமித்வா திட்டம் SVAMITVA SCHEME | Modi at Delhi

ஏழைகள் நிலங்களுக்கு சொத்துரிமை வழங்கும் ஸ்வாமித்வா திட்டம் SVAMITVA SCHEME | Modi at Delhi

கிராமப்புறங்களின் பரம்பரை பரம்பரையாக வசிக்கும் ஏழைகள், தங்கள் நிலத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தனர். நில உரிமையாளராக இருந்த போதும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால், நிலத்தை அடமானம் வைத்து வங்கி கடன் பெற முடியாத சூழல் இருந்தது. அது மட்டுமின்றி, போலி ஆவணங்கள் தயாரித்து அவர்களின் நிலங்களை அபகரிப்பதும் அதிகரித்தது. எனவே, ஸ்வாமித்வா திட்டத்தில், 65 லட்சம் பேரின் நிலம், ட்ரோன் உதவியுடன் சர்வே செய்யப்பட்டு, சொத்துரிமை ஆவணங்கள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களில் நிலம் சர்வே செய்யும் பணி கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், நில உரிமையாளர்களுக்கு நில உரிமை கார்டு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நில உரிமை கார்டுகள் வழங்கப்பட்டன. பயனாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடி அவர்களை ஊக்குவித்தார்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை