தாம்பரம் டு ராமேஸ்வரத்துக்கு புது ரயில்: திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி | Annamalai | Ashwini Vaishnaw
அண்ணாமலை சொன்னார் அஸ்வினி வைஷ்ணவ் செய்தார் திருவாரூருக்கு புதிய ரயில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடந்த 24ம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் புதிய ரயில்கள் இரட்டை ரயில் பாதைகள் மற்றும் பல தடங்கள் அமைத்தல் மேம்பாலங்கள் சுரங்கப்பாலங்கள் வழித்தடங்களை மின்மயமாக்குதல் உள்ளிட்ட ரயில்வே திட்டங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி ஒதுக்கி உதவியதற்காக தமிழக பாஜ சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன்மூலம் தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்ததோடு மட்டுமல்லாமல் பல லட்சம் பயணிகள் தடையின்றி பிற நகரங்களுக்கு பயணம் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.