உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வம்புக்கு இழுத்த விஜய்: திமுக நிர்வாகி சொன்ன தகவல் | Actor Vijay | Aadhav Arjuna | DMK Ministers

வம்புக்கு இழுத்த விஜய்: திமுக நிர்வாகி சொன்ன தகவல் | Actor Vijay | Aadhav Arjuna | DMK Ministers

விஜய் பேச்சு, தி.மு.க.,வையும், அதன் அமைச்சர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்; அதற்கேற்ப இலக்கு நிர்ணயித்து, கட்சியினர் களத்தில் வேலை பார்க்க வேண்டும் என சமீபத்தில் நடந்த திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, அமைச்சர்கள் செல்லும் இடமெல்லாம், 200 தொகுதிகளை இலக்காக வைத்து, தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்று, கட்சியினர் மத்தியில் பேசி வந்தனர். கட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த முழக்கம் ஒலித்தது.. எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையின்மை தொடரும் நிலையில், திமுக எதிர்பார்க்கும் வெற்றி கிடைத்து விடும் என, பலரும் பேசத் துவங்கினர். இந்த நிலையில் தான், அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார். இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என, எகத்தாள முழக்கமிடுகின்றனர். சுய நலத்திற்காக, தி.மு.க போடும் கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர் என்றார்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை