/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வருண், சீமான் மோதல் முடிவுக்கு வருவது எப்போ? | tamilnadu Police | dig Varunkumar | seeman ntk
வருண், சீமான் மோதல் முடிவுக்கு வருவது எப்போ? | tamilnadu Police | dig Varunkumar | seeman ntk
கருணாநிதியை இழிவுபடுத்தி பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அப்போது, திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமாரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து நாதகவினரும் வருண்குமார் மற்றும் அவர் மனைவி பற்றி வலைதளங்களில் விமர்சிக்க துவங்கினர். வருண்குமார் சமூக வலைதளம் மூலம் பதிலடி கொடுத்தார். இருவரும் மாறி மாறி கடுமையாக ஒருமையில் திட்டிக் கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
ஜன 21, 2025