உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ எம்பியை கரம்பிடிக்கும் கர்நாடக இசைக்கலைஞர் | Tejasvi Surya| Sivasri Skandaprasad | Bjp Mp

பாஜ எம்பியை கரம்பிடிக்கும் கர்நாடக இசைக்கலைஞர் | Tejasvi Surya| Sivasri Skandaprasad | Bjp Mp

கர்நாடகாவின் இளம் எம்பிக்களில் ஒருவர் பாஜவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா. 34 வயதாகிறது. பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில் இருந்து எம்பி ஆனவர். இவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரும், கர்நாடக இசை கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தான் மணமகள். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர் சிவஸ்ரீ. சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்ஏ பட்டம் பெற்றார். இசைத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக இத்துறையை தேர்வு செய்தார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்; 2லட்சத்துக்கு அதிகமான பாலோவர்ஸுடன் யூ டியூப் சேனல் நடத்துகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் கன்னட பதிப்பின் பாகம் 1ல் ஹேல்ஹே நீனு என்ற பாடலையும், பாகம் 2ல் வீர ராஜா வீரா என்ற பாடலையும் பாடி இருக்கிறார். 2014ல் கன்னடத்தில் சிவஸ்ரீ கன்னடத்தில் பாடிய ராமர் பக்தி பாடலை பிரதமர் மோடி பாராட்டியதன் மூலம் அவர் அதிகம் அறியப்பட்டார். தேஜஸ்வி சூர்யா-சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் இருவரும் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு நிச்சயம் முடிந்து, மார்ச் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது பற்றி இருவர் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி