மாஜி மந்திரிக்கு போட்டியாக ஓட்டு சேகரிக்கும் பாஜ தலைவர் Theeppainthan Vs SaiSaravanan Puducherry
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி உறுதியாகி இருக்கிறது. ஆனால் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி, யார் யார் வேட்பாளர்கள் என்பன போன்ற விவரங்களை இன்னும் இரு கட்சிகளும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் ஊசுடு தொகுதியில் பாரதிய ஜனதா நியமன எம்எல்ஏ தீய்ப்பாய்ந்தான் இன்று பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் பூஜை செய்து, ஓட்டு கேட்கும் வேலையை தொடங்கினார். வீடு வீடாக சென்ற அவர் அவர் ஓட்டு சேகரிக்கிறார். பாரதிய ஜனதா தலைவர்களின் படங்களுடன், தன் படத்தை போட்டு அச்சிட்ட துண்டுப்பிரசுரங்களை கொடுத்து, தாமரை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அவர் பிரசாரம் செய்வது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீய்ப்பாய்ந்தான் ஓட்டு கேட்கும் ஊசுடு தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் சாய் சரவணக்குமார் வெற்றிபெற்று அமைச்சரானார். Theeppainthan,SaiSaravanan,Puducherry