உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பூரில் அதிமுக-பாஜ பகிரங்க மோதல்-ஷாக் வீடியோ | Tiruppur admk bjp alliance issue | bjp video rel

திருப்பூரில் அதிமுக-பாஜ பகிரங்க மோதல்-ஷாக் வீடியோ | Tiruppur admk bjp alliance issue | bjp video rel

அதிமுக-பாஜ இடையே மீண்டும் கூட்டணி மலர்ந்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திருப்பூர் அதிமுக, பாஜவினர் இடையே பகிரங்க மோதல் வெடித்து இருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. திருப்பூர் அதிமுக பூத் கமிட்டி தொடர்பான மீட்டிங் நடந்த போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜ செயல்படுதுன்னு சொல்லித்தான், அந்த கட்சி உறவை முறித்தோம். இப்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம். ஏன் கூட்டணி வைத்தோம் என்பதை கட்சி தலைமை விளக்க வேண்டும். அப்போது தான் முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். பதறிப்போன முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், அவரை சமாதானப்படுத்தி பேசினார். அவரும் பாஜவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்தார். போன முறை பாஜவுடன் கூட்டணி வைத்தபோது, முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்போம் என்று உறுதி அளித்தோம்; அப்படி இருந்தும், முஸ்லிம்கள் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கட்சியில் இருக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜ கூட்டணியை எதிர்த்த அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு எதிராக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ செயலாளர் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரனுக்கு நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை