தமிழக பாஜவில் 14 பேருக்கு மாநில துணை தலைவர் பதவி! | TN BJP | Nainar Nagendran | Kushboo
தமிழக பாஜவில் மாநில அளவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ளார். மாநில துணை தலைவர்களாக சக்கரவர்த்தி, வி.பி., துரைசாமி , கேபி ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனக சபாபதி, டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெய பிரகாஷ், வெங்கடேசன், கோபால் சாமி, குஷ்பு சுந்தர், சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில அமைப்பு பொது செயலாளராக மீண்டும் கேசவ விநாயகன், மாநில பொது செயலாளர்களாக பால கணபதி, ராம ஸ்ரீனிவாசன், எம்.முருகானந்தம், கார்த்தியாயினி, ஏபி. முருகானந்தம் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், கே வெங்கடசன், வினோஜ் பி செல்வம், அஸ்வத்தாமன், ரகுராமன், அமர்பிரசாத் ரெட்டி உட்பட 15 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில பொருளாளராக எஸ் ஆர் சேகர், இணை பொருளாளராக சிவ சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில தலைமை செய்தி தொடர்பாளராக நாராயணன் திருப்பதி, ஊடக அமைப்பாளராக ஸ்ரீ ரெங்கா நியமிக்கப்பட்டு உள்ளார். இத்துடன் அணி நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மாநில இளைஞர் அணி தலைவராக எஸ்.ஜி சூர்யா, மகளிர் அணி தலைவராக கவிதா ஸ்ரீகாந்த், ஒபிசி அணி தலைவராக திருநாவுக்கரசு, எஸ்.சி அணி தலைவராக சம்பத் ராஜ், எஸ்.டி அணி தலைவராக சுமதி, விவசாய அணி தலைவராக நாகராஜ், சிறுபான்மையினர் அணி தலைவராக ஜான்சன் ஜோசப் நியமிக்கப்பட்டு உள்ளனர்.