உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 7 மாத கர்ப்பிணி போல நடித்து பச்சை குழந்தையை கடத்திய பெண் | young woman arrested trichy hospital

7 மாத கர்ப்பிணி போல நடித்து பச்சை குழந்தையை கடத்திய பெண் | young woman arrested trichy hospital

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (28). நிறைமாத கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. உறவினர் பிரேமா உடனிருந்து கவனித்து வந்தார். அதே வார்டில் இருந்த மீனாட்சி என்ற பெண், சுகன்யாவுடன் பேசிப்பழகியுள்ளார். சுகன்யாவுக்கு மீனாட்சி சின்னச்சின்ன உதவிகளை செய்துள்ளார். சுகன்யாவின் குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போட வேண்டும். ஆனால் உறவினர் பிரேமா வெளியில் சென்றுள்ளார். இதனால் குழந்தைக்கு தடுப்பூசி போட படுக்கையை விட்டு சுகன்யா எழுந்துள்ளார். அப்போது மீனாட்சி, வேணாம் சுகன்யா; நீீ ரெஸ்ட் எடு. நான் குழந்தையை தூக்கிச் சென்று தடுப்பூசி போட்டு விட்டு வருகிறேன் என கூறிவிட்டு குழந்தையை வாங்கிச் சென்றார்.

பிப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை