உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கைதான அதே கரூர் மாசெவை வைத்து விஜய் சம்பவம் tvk mamallapuram meeting | vp mathiyazhagan | TVK Vijay

கைதான அதே கரூர் மாசெவை வைத்து விஜய் சம்பவம் tvk mamallapuram meeting | vp mathiyazhagan | TVK Vijay

TVK கூட்டத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் மதியழகனை வைத்து தரமான பதிலடி விஜய் செய்த செயல் நெகிழ்ச்சி காட்சிகள் கரூரில் நடந்த தவெக பொதுக்குழு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. துயர சம்பவத்துக்கு பிறகு வீட்டில் முடங்கிய விஜய், பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் சந்தித்தார். அதன் பிறகு இன்று மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் விஜய் தலைமையில் கூடியது. கரூர் சம்பவத்தின் போது, தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்து இருந்தனர். பொதுக்குழுவில் அதே மதியழகனை வைத்து கரூர் சம்மந்தமான தவெகவின் முதல் தீர்மானத்தை விஜய் வாசிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்மானத்தை வாசிக்கும் முன்பு மதியழகனை மேடையில் விஜய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தியது தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை