உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எங்கேயும் போகக்கூடாது! விஜய் ரிசார்ட் அரசியல் TVK won | CM Vijay | Mamallapuram Resort | TVK vs DMK

எங்கேயும் போகக்கூடாது! விஜய் ரிசார்ட் அரசியல் TVK won | CM Vijay | Mamallapuram Resort | TVK vs DMK

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. அந்த கட்சி 233 தொகுதிகளில் தனித்து களம் இறங்கி 108 இடங்களில் வென்றுள்ளது. தேர்தலில் முதலிடம் வந்திருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பர் விஜய் கட்சிக்கு இல்லை. இதனால் திமுக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் லீக், விசிக போன்ற கட்சிகளிடம் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தவெக. ஆதரவு தரும் கட்சிகளின் பலத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். இதை எல்லாம் முன்கூட்டியே கணித்து தான் மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலை புக் செய்து வைத்திருந்தது தவெக. தவெகவில் வென்ற அனைவரையும் சென்னைக்கு வர விஜய் உத்தரவிட்டுள்ளார். ‛வெற்றி சான்றிதழுடன் இன்று மதியத்துக்குள் அனைவரும் சென்னையில் இருக்க வேண்டும். மாமல்லபுரம் ஓட்டலில் அவர்கள் தங்கவைக்கப்படுவார்கள். ஆட்சி அமைக்கும் வரை அதே ஓட்டலில் தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தவெக மூத்த தலைவர் ஒருவர் சொன்னார். #TVKVijay #TNElection2026 #Mamallapuram #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay #Seeman #Annamalai #EPS #Modi #AmitShah #TamilNaduPolitics #ElectionDebate #TamilPolitics #Voting2026 #ElectionAnalysis #PoliticalRivalry #Campaign2026

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை