திமுக சதியை சொல்லி கூட்டணிக்கு அழைத்த பாஜ | Vijay | TVK | Vijay in NDA| CBI | Investigation
தவெக தனித்து நின்றாலே 25 சதவீத ஓட்டுகளை பெறும். தேர்தல் நெருக்கத்தில் விஜய் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால் ஓட்டு சதவீதம் கூடும். இது தேஜ கூட்டணிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கரூர் சிபிஐ வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட விஜயை மீண்டும் விசாரணைக்காக டில்லிக்கு வரவழைத்தனர் என தவெக வட்டாரங்கள் கூறுகிறது. விஜயுடன் டில்லி சென்ற ஆதவ் அர்ஜுனா, விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி பாஜவை சேர்ந்த டில்லி முக்கியஸ்தர்களை டில்லி கோல்ப் கிளப் அருகே 14ம் தேதி இரவு சந்தித்து பேசி உள்ளனர். தவெக தனித்து போட்டியிட்டால், திமுக எளிதாக வென்றுவிடும். அதைதான் விஜய் விரும்புகிறாரா. திமுகவை வீழ்த்த, தேஜ கூட்டணிக்கு விஜய் வரவேண்டும். கரூர் வழக்கில் கூட இன்றுவரை பாஜ தான் உதவி வருகிறது.