டிரம்ப் முயற்சி தோல்வியா? அமெரிக்கா புதிய முடிவால் அதிர்ச்சி | Ukraine Russia war | Marco rubio
ரஷ்யா-உக்ரைன் போர் யாரும் எதிர்பாராத புதிய ட்விஸ்ட் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது நான் மீண்டும் அதிபரானால் 24 மணிநேரத்துக்குள் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். டொனால்ட் டிரம்ப் 2வது முறை அதிபராக பதவி ஏற்ற பிறகு உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தினார். டிரம்ப் முயற்சிகளுக்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தது. முதல் கட்டமாக 30 நாட்களுக்கு போரை நிறுத்த உக்ரைன் சம்மதித்தது. ஆனால் ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் உக்ரைன் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்.