உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக மாசெக்கள் கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம் | Undeclared emergency | District secretaries meeting

திமுக மாசெக்கள் கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம் | Undeclared emergency | District secretaries meeting

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை! யார் வந்தாலுமு் ஸ்டாலின் சொன்னது தான் நடக்கும் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பு, மத்திய அரசிடம் தான் உள்ளது என்பதை உணர்த்தி, இப்போது அதற்கான அறிவிப்பை முதல்வர் பெற்றுள்ளார். சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே, கவர்னருக்கு இல்லை என, வரலாற்று சிறப்புமிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பெற்று, அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார். மாநில சுயாட்சிக்காக உயர்மட்ட குழு அமைத்ததற்காகவும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி நீதித்துறை உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறி குறுக்கிட்டு, அவற்றின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைக்கு இலக்காகும் வகையில், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை மத்திய பாஜ அரசு உருவாக்கி வருகிறது.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி