உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரே நேரத்தில் மேடையேறும் 2 முக்கிய தலைவர்கள் | VCK | TVK | Vijay | Thirumavalavan

ஒரே நேரத்தில் மேடையேறும் 2 முக்கிய தலைவர்கள் | VCK | TVK | Vijay | Thirumavalavan

சென்னையில் டிசம்பர் 6ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரமாண்ட விழா நடக்க இருக்கிறது. விழாவில் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை திருமாவளவன் வெளியிட தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பெற்று கொள்கிறார். இந்த புத்தகத்தின் ஆசிரியர் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இவர் தான் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோஷத்தை உருவாக்கி பரபரப்பு கிளப்பியவர். ஆதவ் எழுப்பிய திடீர் கோஷம் திமுக கூட்டணியில் சலசலப்பு உண்டாக்கியது. ஆனால் ஆதவ் பேச்சால் யாருக்கும் அதிருப்தி இல்லை. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார் திருமாவளவன். ஆதவ் மீது நடவடிக்கையை எதிர்பார்த்த திமுகவுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்த பின்னணியில் தான் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விக்கிரவாண்டியில் விஜய் நடத்தினார். அதில் லட்சக்கணக்கில் ரசிர்கள் குவிந்து வியக்க வைத்தனர். மாநாட்டில் பேசிய விஜய் விசிகவினர் மனம் குளிரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தவெகவோடு இணைந்து தேர்தல் களத்தை சந்திக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிமையும் பங்கும் உண்டு என்றார். இவ்வளவு அழுத்தம் திருத்தமாக விஜய் சொன்னதால் பின்னணியில் ஆதவ் இருக்கலாமோ என்ற சந்தேகம் திமுகவுக்கு ஏற்பட்டது. இதையடுத்து தமிழக உளவுத்துறையின் கவனம் விஜய், திருமா, ஆதவ் மீது திரும்பியது. உளவுத்துறைக்கு கிடைத்த முதல் தகவலே திமுகவை மிரள வைத்துள்ளது. டிசம்பர் 6ல் சென்னையில் நடக்கும் அம்பேத்கர் பற்றிய நுால் வெளியீட்டு விழாவில், திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையில் பேச உள்ளனர் என தெரியவந்துள்ளது. இது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் சொல்லும் தகவல் திமுக தரப்பை இன்னும் பீதி அடைய செய்துள்ளது.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ