உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதவ் அர்ஜுனா வீட்டில் ED ரெய்டுக்கு இதுதான் காரணம் | VCK Aadhav Arjuna | lottery Martin | ED Raid

ஆதவ் அர்ஜுனா வீட்டில் ED ரெய்டுக்கு இதுதான் காரணம் | VCK Aadhav Arjuna | lottery Martin | ED Raid

விசிக ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சல்லடை ஏன்? அதிர வைக்கும் பின்னணி திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. சென்னை போயஸ் கார்டனில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. இந்த சோதனை காலை 6 மணிக்கு துவங்கியது. ரெய்டு நடக்கும் இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். சென்னை மற்றும் கோவை துடியலூரில் உள்ள லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. மார்ட்டின் பல சர்ச்சைகளை சம்பாதித்த தொழில் அதிபர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் சோதனைக்கு பல முறை உள்ளானவர். முறைகேடு வழக்குகளையும் சந்தித்தவர். இவரது மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. எனவே தான் ஆதவ் தொடர்புடைய இடங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆதவ் தொடர்புடைய இடங்களிலும் இதற்கு முன்பே சில முறை ரெய்டு நடந்து இருக்கிறது. மார்ட்டின மற்றும் ஆதவ் வீடுகளை குறி வைத்து நடக்கும் இந்த ரெய்டுக்கான முக்கிய காரணமும் இப்போது வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டில் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை