கிளாம்பாக்கத்தில் காட்டிய வேகம் வெள்ளலூருக்கு இல்லையா? | Vellalore Bus Stand | Coimbatore
கோவையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க காந்திபுரம் பஸ் ஸ்டான்டுக்கு மாற்றாக வெள்ளலூரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடக்கிறது. 168 கோடி மதிப்பில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் திட்டத்தில் 50 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. இதுவரை 40 கோடி செலவிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து அப்போதே சட்டசபையில் அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். பஸ் ஸ்டாண்டுக்கு இணைப்பு ரோடுகள் சரியாக இல்லை. திருச்சி ரோடு அகலப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் நேரு கூறியிருந்தார். அமைச்சர் சொல்லி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் ஆர்வலர்கள்.