பிரதமர் உட்பட வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி | CP Radhakrishnan | Vice president election
கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்காக உழைப்பேன் சி.பி.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வரும் செப்டம்பர் 9ல் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா கவர்னராக இருக்கும் சிபி.ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார். இந்நிலையில் தன்னை தேர்வு செய்த பாஜ தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜ பார்லிமென்ட் குழு உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜ கூட்டணி கட்சிகள் என அனைவருக்கும் என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்ததற்காகவும் சொல்ல முடியாத அளவு நெகிழ்ச்சி அடைந்தேன். எனது கடைசி மூச்சு வரை நாட்டிற்காக கடினமாக உழைப்பேன் என உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.