உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் கட்சி மாநாட்டுக்கு இப்படியொரு சிக்கலா? | TVK | Actor Vijay

விஜய் கட்சி மாநாட்டுக்கு இப்படியொரு சிக்கலா? | TVK | Actor Vijay

சுத்தியும் கிணறு.. அவ்ளோ தான்! முடிச்சு விட்டாங்க விஜய் கட்சிக்கு அடுத்த தலைவலி நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பைபாஸ் ரோட்டின் அருகே 85 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த பைபாசில் கிழக்கு பகுதியில் 40 ஏக்கர், தென் மாவட்ட வாகனங்கள் நிறுத்த மேற்கு புறத்தில் 28 ஏக்கர் இடம் தனியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில் சினிமா கலைஞர்களால் மேடை அரங்கம், நுழைவு வாயில் சினிமாவை மிஞ்சும் வகையில் நவீனமாக அமைகிறது. ரயில் பாதையை ஒட்டி மாநாடு நடக்கும் இடம் அமைந்துள்ளதால் அங்கே யாரும் நெருங்காத வகையில் 10 அடி உயரத்துக்கு தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. மாநாடு நடக்கும் இடத்தின் மேலே செல்லும் மின் கம்பிகள் மின்வாரிய அனுமதியுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு முடியும் வரை நிலத்தை தோண்டி கேபிள் மூலம் மின் சப்ளை செய்யலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இடத்தை சுற்றி விவசாய நிலத்தில் நிறைய திறந்தவெளி கிணறுகள் உள்ளது. அங்கெல்லாம் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்தும், தண்ணீர் இல்லாத கிணறை மண்கொட்டி மூடவும் திட்டமிட்டுள்ளனர். வரும் 23ம் தேதி மாநாடு நடக்க உள்ள நிலையில் எல்லா பணிகளும் மின்னல் வேகத்தில் நடக்கிறது.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !