இடைத்தேர்தல் பொறுப்பாளராக புதிய அமைச்சர் | Vikravandi by election | DMK Minister campaign
அமைச்சரின் அளவான பிரசார பணி ஆதரவாளர்களின் வசூல் வேட்டை பற்ற வைத்த ஆளுங்கட்சியினர் விழுப்பரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில வரும் 10ந் தேதி இடைத்தேர்தல் நடக்குது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிங்களுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுது. தேர்தல்ல ஜெயிக்க 3 தரப்பிலும் பிரச்சாரம் அனல் பறக்குது. மாநிலம் முழுக்க இருந்து அந்தந்தந் கட்சிகளோட முக்கிய தலைவர்கள் முகாமிட்டிருக்கிறதால விக்கிரவாண்டி முழுசும் கட்சியினரால நிரம்பி இருக்கு.. இதுக்கு இடையில அங்க தேர்தல் வேலைகள் செஞ்சிகிட்டிருந்த உள்ளூர் அமைச்சரு, காலையிலயும், மாலையிலயும் ஒரு முறை தான் பிரசாரத்துக்கு போயிருக்காரு.. ஆனா தேர்தல் செலவுக்குனு சொல்லி, மாவட்டத்துல இருக்குற எல்லா துறை அதிகாரிங்க கிட்டயும் அவரோட ஆதரவாளருங்க வசூல் வேட்டை நடத்திருக்காங்க. இதனால நமக்கு வெற்றி நிச்சயம் தான்னு சொன்னாலும், ஓட்டு வித்தியாசம் குறையும்னு தேர்தல் வேலைக்கு வந்த வெளியூர் ஆளுங்கட்சிகாரங்க மேலிடத்துல பத்த வச்சிட்டாங்களாம்.. இப்ப உதயநிதிக்கு நெருக்கமான அன்பான அமைச்சர பொறுப்பாளரா நியமிச்சி பணிகள முடுக்கி விட்டிருக்காங்களாம்..