உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திடீர் அரசியல் பிரவேசம் : காரணத்தை உடைத்த வினேஷ் போகத் | Vinesh phogat | Congress candidate

திடீர் அரசியல் பிரவேசம் : காரணத்தை உடைத்த வினேஷ் போகத் | Vinesh phogat | Congress candidate

நான் அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்! மனம் திறந்த வினேஷ் போகத் ஹரியானா சட்டசபை தேர்தல் அங்குள்ள 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ல் ஒரே கட்டமாக நடக்கிறது. ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டியிடுகிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை சர்ச்சையால் இறுதி போட்டியில் பதக்கத்தை இழந்த இவர், இந்திய மக்களின் கவனத்தை பெற்றார். நாடு திரும்பிய அவர், அரசியலில் ஈடுபடப்போவதாக பல தரப்பிலும் பேசப்பட்ட நிலையில் ராகுலை சந்தித்தார். தொடர்ந்து அக்கட்சியில் இணைந்தவருக்கு சட்டசபை தேர்தலில் சீட்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வினேஷ் போகத், தான் அரசியலுக்கு வந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலுக்கு விருப்பப்பட்டு வரவில்லை. அவசியம் என்பதால் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தேன். 2024 ஒலிம்பிக்கிற்கு பிறகு, சூழ்நிலைகள் என்னை தேர்தலில் போட்டியிட முடிவெடுக்க செய்தது. இளம் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம். நாங்கள் தெருவில் போராடினோம். எங்களுக்கு என்ன கிடைத்தது? அவமானப் படுத்தப்பட்டோம். இதை தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கிற்கு சென்றேன். எனக்கு நீதி கிடைத்ததா? ஒன்றுமில்லை. எந்த ஒரு பெண்ணும் அரசியலில் நுழைவதற்காக தெருவில் இறங்கி போராட மாட்டார். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க பாஜவுக்கு எல்லா வாய்ப்புகளையும் வழங்கிய பிறகும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி