/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கட்சி இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன்: யோகி Yogi Adityanath |PM Modi| BJP| UP CM
கட்சி இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன்: யோகி Yogi Adityanath |PM Modi| BJP| UP CM
பிரதமர் மோடி ஓய்வு? உபி முதல்வர் ஓபன் டாக் அரசியலா, ஆன்மிகமா யோகியின் பாதை எது? பாஜவின் முன்னோடியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றார். ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் உருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்திய மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மோடியின் நாக்பூர் பயணம், தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு ஆதரவுடன் தான் மோடி 2014ல் பிரதமரானார். ஆனால், பிரதமராக பொறுப்பேற்ற பின் மோடி ஒருமுறை கூட ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு செல்லவில்லை. 11 ஆண்டுகள் கழித்து தற்போது சென்றுள்ளார்.
ஏப் 01, 2025