கோவையில் பலத்த மழை சிறுவனுக்கு நேர்ந்த சோகம் | 3Yrs Old baby | Dead | Covai
கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்மழை பெய்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அருகே சேக்கல் முடி எஸ்டேட்டை சேர்ந்தவர் முத்துக்குமார் (40). மனைவி சாந்தி. இருவரும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு சுபஸ்ரீ வயது 7, முகிலன் வயது 3 என 2 குழந்தைகள். இன்று காலை மகன் முகிலனை குழந்தைகள் காப்பகத்தில் விடுவதற்காக முத்துக்குமார் கிளம்பினார். அப்படியே மகள் சுபஸ்ரீயை பள்ளியி்ல் விட உடன் அழைத்துச் சென்றார். முகிலனை தூக்கிக்கொண்டு முத்துக்குமார் முன்னே நடக்க 10 அடி தூரம் பின்னால் சுபஸ்ரீ நடந்து சென்றார். வீட்டில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக சென்றபோது மழையின் காரணமாக பலத்த காற்று வீசியது. சவுக்கு மரம் வேருடன் பிடுங்கிக் கொண்டு முத்துக்குமார் மீது விழுந்தது.