80 வயது மூதாட்டிக்கு நடந்தது என்ன? வெளியான ரிப்போர்ட் | Accusing police | Kanniyakumari
கன்னியாகுமரி மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள், வயது 80. திங்களன்று அதிகாலை இவரது பேரன் சாகித் ஜெட்லியை சைபர் கிரைம் வழக்கில் கைது செய்ய நான்கு போலீசார் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் சாகித் ஜெட்லியை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடியுள்ளார். இதற்கிடையே பேரனை ஏன் விரட்டுகிறீர்கள் என சூசைமரியாள் போலீசாருக்கிடையே சென்றுள்ளார். அவரை தள்ளிவிட்டு போலீசார் சாகித் ஜெட்லியை பிடிக்க விரட்டியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த மூதாட்டி காயம் அடைந்தார். மூதாட்டியை அவரது மருமகள் சந்திரகலா ஆம்புலன்ஸில் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மூதாட்டியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மருமகள் சந்திரகாலா கூறினார்.