பறிபோன 3 உயிர்களுக்கு அமைச்சரின் பதில் என்ன? | Annamalai | BJP | Drinking water with sewage issue
சென்னை பல்லாவரம் மலைமேடு மக்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த 5ம் தேதி வாந்தி, வயிற்றுப்போக்கால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர், சிகிச்சை பலனின்றி இறந்தனர். கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததே பாதிப்புக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பகுதியில் அன்றைய தினங்களில் வழங்கிய குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், அதன் முடிவுகள் கிடைத்துள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குடிநீரில், கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக் கூடாது என்பது, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால், பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது, சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது.